·   ·  775 posts
  •  ·  0 friends

பற்களை பேணுங்கள்

உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு உறுப்புக்களும் அவசியமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பை அகற்றினாலும் அதன் பின்விளைவுகள் இருந்தே தீரும். இதில் பற்களும் உள்ளடங்குகிறது.

பற்கள் என்பதும் கூட உடல் சமநிலையை பேணும் ஒரு அங்கம் ஆகும். அதனால் தான் இரண்டும் பக்கமும், மேல் கீழும் சம அளவில் பற்கள் காணப்படுகின்றன. பற்களை பிடுங்கும் பொழுது அந்த சமநிலை அற்று போகும். சிலருக்கு வெர்டிகோ என்ற பிரச்சினை உள்ளது. அதாவது தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வு. பற்களின் பிரச்சினையால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகவே பற்களை பேணுங்கள். அலட்சியம் வேண்டாம்.

பற்பசையை பாவிக்காது விட்டாலேயே பற்கள் மிக ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை மூலிகை பொடிகளை பாவியுங்கள்.

என்றும் பல் தூரிகை தெரிவு செய்யும் பொழுது மென்மையான (SOFT) தூரிகையை தெரிவு செய்யுங்கள். அழுத்தி பல்லை விளக்க வேண்டாம். நீண்ட நேரம் விளக்கவும் வேண்டாம்.

குளிரான, சூடான உணவுகளை உண்ணாதீர்கள்.

பழங்கள், பச்சைகாய்கறிகளை அடிக்கடி மெல்லுங்கள்.

கடையில் விற்கும் குளிர்பானங்கள் மற்றும் சகல தீங்கான உணவுகளை உண்ணாதீர்கள். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் முதலில் தாக்குவது பற்களையே.

இரவில் உறங்கப் போகும் பொழுது மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்த நீரை சிறிது நேரம் நன்கு வாயில் வைத்தே கொப்பளித்து பின்னர் துப்பி விட்டு அப்படியே விட்டு விட்டால் சொத்தை பல் வலி குறையும்.

எண்ணெய்க்கு பதில் கற்றாழை சாறு கொண்டு "ஆயில் புல்லிங்" பண்ணலாம். இது கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.

  • 52
  • More
Comments (0)
Login or Join to comment.