- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 27.4.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரிஷபம்
உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பணியாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மிதுனம்
வியாபாரத்தில் இருந்த மந்ததன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
வெளியூர் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு
சிம்மம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஆறுதலும் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
நினைத்த சில பணிகள் தாமதமாக நிறைவேறும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிராக செயல்பட்டவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சந்தேக எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. உலகத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
துலாம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வருகையால் அலைச்சலும் விரயங்களும் உண்டாகும். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
நிதானமான அணுகுமுறைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் துரிதமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சதுர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக்கொள்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகள் இழுபறியாகி கிடைக்கும். பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். மற்றவர்களின் செயல்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் அறிமுகம் ஏற்படும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும் அனுபவமும் கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்