·   ·  566 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? - 1.10.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

ரிஷபம்

பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். ஆன்மீகப் பணியில் விருப்பம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

மிதுனம்

வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு செயல்களை தவிர்க்கவும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் மேம்படும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் உயரும். ஓய்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

உறவினர்களிடத்தில் மதிப்புகள் உயரும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான கனவுகள் உருவாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

துலாம்

நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனைவி விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான அனுபவம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

தனுசு

தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மகரம்

செய்யும் காரியங்களில் சற்று கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிரவும். சஞ்சலங்களால் மனதளவில் குழப்பங்கள் அதிகரிக்கும் வரவுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும் பேச்சுகளில் பொறுமையை கையாளவும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கும்பம்

குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் மதிப்பை மேம்படுத்தும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மீனம்

சுப காரியங்களை முன் நின்று முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 538
  • More
Comments (0)
Login or Join to comment.