·   ·  345 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 28.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். வெளிநாட்டு வர்த்தகத்தில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதில் நன்மதிப்பை மேம்படுத்தும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

ரிஷபம்

குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.உடல் நிலையில் புதிய பொலிவுடனும் புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மிதுனம்

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதாரண முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

கடகம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். திருத்தல பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாடுகள் வரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் அமையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

 

சிம்மம்

இடம் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத கடன் உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த வரவுகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

துலாம்

அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் மறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களின் ஒத்துழைப்புகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மறைமுகமான வதந்திகள் தோன்றி மறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவினர்கள் வழியில் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த கட்டுப்பாடுகள் விலகும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

மகரம்

உயர்கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். மனதளவில் இருந்த கவலைகள் மறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கும்பம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். முயற்சிக்குண்டான பலன்கள் கிடைக்கும். பணி நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்ற செயல்களில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மீனம்

 

பணி நிமித்தமான அலைச்சல்கள் குறையும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கலைத்துறைகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 337
  • More
Comments (0)
Login or Join to comment.