- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 30.3.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் உருவாகும். பூர்விக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஓய்வு தேவைப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
ரிஷபம்
கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயுடன் அனுசரித்து செல்லவும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். அமைதி காக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
பணிகளில் இடமாற்றங்கள் சாதகமாக அமையும். திறமைக்கான மதிப்புகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியம் பற்றிய கவலைகளைத் தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். தனலாபம் பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பேச்சுத் திறமையால் லாபங்கள் அதிகரிக்கும். பொன் பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகள் பலப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சிம்மம்
ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி வட்டங்களில் அலைச்சல்கள் மேம்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்புக்கு உண்டான லாபங்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முதலீடுகளில் விவேகம் வேண்டும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வருங்கால சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
கால்நடை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பேச்சுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபார இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். அரசு பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பாசம் பொழியும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் வருத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்தை நிதானமாக சொல்வது நன்மை தரும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மீனம்
ஆரோக்கிய இன்னல்கள் குறையும். எதிர்ப்புக்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.மனதில் பணி மாற்ற சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத தன வரவும் அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். நிம்மதி நிலைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்