·   ·  150 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 27.8.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். தடையாக இருந்தவர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

ரிஷபம்

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். சிக்கனமான செயல்பாடுகள் நெருக்கடிகளை தவிர்க்கும். இறை சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். மறதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மிதுனம்

பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரிகளிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். உறவுகளுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

கடகம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிக்கல்களால் ஏற்பட்ட தடைகள் விலகும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் சில பணிகளை முடிப்பீர்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கன்னி

எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் பிறக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். முதலீடு குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

துலாம்

நண்பர்களுக்கு இடையே சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும். வெளி உணவுகளால் விரயங்கள் ஏற்படும். சாட்சி கையெழுத்து தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் உழைப்புக்கான உயர்வு உண்டாகும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

தனுசு

வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள்.சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் வரவுகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவரசமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மகரம்

புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். தந்தையுடன் அனுசரித்து செல்லவும். மனை சார்ந்த பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வியாபார பணிகள் எப்பொழுதும் போல நடைபெறும். பழக்க வழக்கங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

 

கும்பம்

எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து செயல்படாமல் இருக்கவும். இழுபறியான சில பணிகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்கள் இடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் பகிராமல் இருக்கவும். விவேகத்துடன் செயல்படுவது நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்கள் மூலம் வருமானம் ஏற்படும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். தந்திரமான செயல்பாடுகள் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் உருவாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

  • 146
  • More
Comments (0)
Login or Join to comment.