
பூசணிக்காய் விதைகளின் மருத்துவ குணங்கள்
பூசணி விதை , சூரிய காந்தி விதை , ஆளி விதை , எள் , சியா விதை மற்றும் கசகசா போன்றவைகளை , நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம் . பூசணி விதைகளில் மக்னீசியம் , மாங்கனீசு , காப்பர் , புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன .
பூசணி விதைகளை ஒருவர் , தினமும் , ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் , கிடைக்கும் நன்மைகள் :
* பூசணி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் , உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து , உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் .
* குளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு , ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து , சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும் .
* நார்ச்சத்து , புரோட்டீன் , வைட்டமின்கள்மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை வளமான அளவில் உள்ளது. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ் , உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து , உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும் .
* பூசணி விதைகளில் ஏராளமான அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன . மூட்டு வலியை குறைப்பதுடன் , இப்பிரச்னையிலிருந்து முற்றிலும் விடுவிக்கும் . * முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைப்பாட்டால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து , ' ஆஸ்டியோபோரோசிஸ் ' குறைபாடு ஏற்படும் . பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது . இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் .
* பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை மேம்படுத்தி , மன இறுக்கத்தைக் குறைக்கும் . * இறுதி மாதவிடாய் கால அறிகுறிகளான உடல் சூடு , தலைவலி , இரவு நேர வியர்வை மற்றும் ஏற்ற இறக்க மனநிலை போன்றவற்றை குறைக்கும் .
* பூசணிவிதைகளில் உள்ள , ' ஆன்டி ஆக்ஸிடன்ட்'கள் , புரோஸ்டேட் வளர்ச்சியைத் தடுக்கும் . ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியமாக இருப்பதற்கு , ஜிங்க் சத்து அவசியமானது . புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்பட்டு , விந்தணுக்களின் எண்ணிக்கையும் ஆரோக்கியமான அளவில் இருக்கும் . இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோயைத் தடுப்பதிலும் , சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது .