மயிர், முடி
உளை, தளை, குழல், பங்கி, தொங்கல், நவிர், கார், குடுமி, குஞ்சி, சிகை, பித்தை, ஓரி என்பன, அந்தக் காலத்தில் ஆண்களின் தலைமுடியைக் குறிக்க வழங்கப்பட்ட சொற்களாகும்.
ஒரு பொருள் குறிக்க வழங்கப்பட்ட பலசொற்களாக இவை காணப்பட்டாலும், இவற்றிடையே நுண்ணிய வேறுபாடு உண்டு. நான் அறிந்த வேறுபாடுகளைக் கீழே தரப்பட்டுள்ளது.
உளை – பிடறி வரை வளர்த்து நறுக்கப்பட்ட முடி.
தளை – பின்னலிட்டுக் கட்டப்பட்ட முடி.
குழல் – தலையைப் பின்னி உச்சியில் சுருட்டி முடிக்கப்படுவது.
பங்கி – நறுக்கி வெட்டப்பட்ட முடி.
தொங்கல் – முடித்துக் கட்டாமல் தலைமுடியைத் தொங்க விடுவது.
நவிர் – உச்சி முடி.
கார் – கருமையான முடி
குடுமி, குஞ்சி, சிகை – இவை குடுமியாய் முடிந்த முடியின் நிலையைக் குறிப்பிடுவன.
மயிர், முடி என்பன இதன் பொதுப்பெயர்.