- · 0 friends
ஜனாதிபதியின் தாயின் பிறந்தநாள்
ஒரு நாட்டின் ஜனாதிபதியின் தாய்...
அலங்கார மேடைகள் இல்லை...
வெடி வாண வேட்டுகள் இல்லை...
கேக் வெட்ட மகன் கூட பக்கத்தில் இல்லை...
சுற்றி நின்று கைதட்ட அமைச்சர்கள் கூட்டம் இல்லை...
ஊடக கேமராக்களின் பளிச் வெளிச்சம் இல்லை..
ஏனென்றால் அந்த தாய்க்கு தெரியும்...
தன் மகன் இன்று ஒரு குடும்பத்தின் மகன் இல்லை...
2 கோடியே 20 லட்சம் மக்களின் மகன்!
ஒரு தேசத்தின் பாரத்தை தோளில் சுமக்கிறார் என்று!
அன்புள்ள அம்மா,
நீங்கள் பெற்றெடுத்து, பாலூட்டி, பண்பூட்டி வளர்த்த அந்த மகனால் தான்
இன்று இலங்கை என்ற தேசம் மூச்சு விடுகிறது.
உங்கள் பிறந்தநாளுக்கு மகன் அருகில் இல்லாவிட்டாலும்...
இந்த தேசத்தின் 2 கோடியே 20 லட்சம் பிள்ளைகளும் இன்று உங்களை வாழ்த்துகிறோம்!
நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும், நிம்மதியான வாழ்வும் உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே!
இலங்கை ஜனாதிபதி அனுர குமாரவின் தாயார்.
