·   ·  1970 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 6.10.2026

மேஷம் : குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். நெடு நாட்களுக்குப் பிறகு பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும்.

ரிஷபம் : சமூகத்தில் பிரபலமானவர்களைச் சந்திப்பீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள் வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பணவரவு உண்டு.

மிதுனம் : வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத் தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பேச்சில் இனிமை பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். வெளியூர் பயணம் உண்டு. நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.

கடகம் : உடல்சோர்வு, அலைச்சல் ஏற்படும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சந்திக்க வேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

சிம்மம் : நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதரர் வகையில் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி : எதிர்பார்ப்புகள் யாவும் மளமளவென்று நிறைவேறும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு. திடீர் பயணம் ஏற்படும்.

துலாம் : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலுவல கத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

விருச்சிகம் : கடந்தகால இனிய சம்பவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு : புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பங்குவர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.

மகரம் : எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் தடைபடும். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் சுணக்கம் காணப்படும். வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரும். யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர வேண்டாம்.

கும்பம் : விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

மீனம் : எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளை களின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

  • 27
  • More
Comments (0)
Login or Join to comment.