
அமில சுரப்பை கட்டுப்படுத்தும் பாகற்காய்
நாம் என்ன சாப்பிடுகிறோம், எதைத் தவிர்க்கிறோம் என்பது நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதிலும் இயற்கையாக கிடைக்கும் காய்கனிகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியம் மேம்படுவது ஒருபுறம் என்றால், நாம் உண்ணும் உணவுகளால் உடலில் உருவாகும் அமிலங்களின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நோய்கள் நம்மை பாதிக்கும்.
அதிலும் நம் உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலம், ஒரு நச்சுப் பொருள் ஆகும். நமது சிறுநீரகம் அதை உடலில் இருந்து வடிகட்டி இருந்து நீக்குகிறது. ஆனால் சில காரணங்களால் நமது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டுவதை நிறுத்தினாலோ அல்லது, குறைத்துக் கொண்டாலோ, யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிக்கத் தொடங்குகிறது. படிக வடிவில் நமது மூட்டுகளில் குவியத் தொடங்குகும் யூரிக் ஆசிட் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வலி, பிடிப்புகள், வீக்கம், மூட்டுகள் கன்றிப்போவது, நடப்பதில் சிரமம் என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், மோசமான வாழ்க்கை முறை, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், அதிகப்படியான மது அருந்துதல் என பல விஷயங்கள், உடலில் உருவாகும் யூரிக் ஆசிட் அதிகரிப்புக்கு காரணமாகிறது.
இரத்தத்தில் அதிகரித்துள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க, நீங்கள் பல வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம், அதில் பாகற்காய்க்கு முதலிடம் உண்டு. பாகற்காய் சாப்பிடுவதை பலர் விரும்புவதில்லை. ஆனால் உங்கள் யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், உங்கள் உணவில் பாகற்காய் சேர்க்க வேண்டும். யூரிக் அமில உற்பத்தியில் பாகற்காய் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பாகற்காய்
பாகற்காய் உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கும் என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. பாகற்காயை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் தீர்க்கும். சர்க்கரை நோய் பிரச்சனையையும் குறைக்கும் பாகற்காயில், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்கள், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. சமீபத்திய ஆராய்ச்சியில், எலிகளுக்கு பாகற்காய் சாறு கொடுக்கப்பட்டது. அது, அவற்றின் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்?
இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க வேண்டுமானால், பாகற்காய் சாறு அருந்தலாம். தினமும் காலையில் 1 கப் பாகற்காய் சாறு குடிப்பதால் யூரிக் அமிலத்தை பெருமளவு குறைக்கலாம். இது தவிர, பாகற்காய் காய்கறி, பூஜியா, ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
மிகவும் ஆரோக்கியமான காய்கறிகள் பட்டியலில் பாகற்காய் உள்ளது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
(முக்கிய குறிப்பு. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். )