சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா
- மஸ்கோத் அல்வா என்றாலே இலங்கைதான். எனினும் தமிழகத்தில் மஸ்கோத் என்றால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர்தான் ஞாபகத்துக்கு வரும்.
- திருநெல்வேலிதான் `அல்வா’விற்குப் பெயர்பெற்ற ஊர் எனச் சொன்னாலும், தூத்துக்குடியில் அதற்குப் போட்டியாகத் தயார் செய்யப்படும் ‘முதலூர் மஸ்கோத் அல்வா’வும் பிரபலமானது.
- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள முதலூரைச் சேர்ந்த ஜோசப் என்பவர், தேங்காய்ப்பாலில் தயார் செய்து அறிமுகப்படுத்திய அல்வாதான் `மஸ்கோத் அல்வா.’
- இந்த மஸ்கோத் அல்வா, தற்போது `S J மஸ்கோத் அல்வா’ என்ற பெயரில் விற்பனையாகிறது.
- முதலூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் 'மஸ்கோத் அல்வா' மிகவும் புகழ்பெற்றது.
- தேங்காய்ப்பால், முந்திரி, மைதா, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அல்வா, அதன் தனித்துவமான சுவையால் அனைவரையும் ஈர்க்கிறது.
- தேங்காய்ப்பால் கலக்கறதால மஸ்கோத் அல்வாவை ஒரு மாசத்துக்குள்ள சாப்பிட்டுடணும். பிரிட்ஜ்ல வெச்சிருக்கோம்னா நாலு மாசம் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம்.
- இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தொலை தூரங்களில் தொழில் புரிந்தாலும் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் மஸ்கோத் அல்வாவை வாங்க மறப்பது இல்லை
- இங்கு தயாரிக்கப்படும் அல்வா நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, மும்பை, தில்லி மற்றும் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
- கோதுமையில் தயாரிக்கப்படும் மஸ்கோத் அல்வாவைப் போன்று தற்போது பேரிச்சை அல்வா, முந்திரி அல்வா, நெல் அல்வா என பலதரங்களில் அல்வா தயாரித்து விற்பனையில் உள்ளது.
- பலரக அல்வா இருந்தாலும் மஸ்கோத்துக்குதான் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.