·   ·  271 posts
  •  ·  0 friends

அவல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  1. அவலில் ஆந்தோசயனின், பாலிபீனால் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளது. குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிர் போன்று ப்ரோபயாடிக் சத்து அவலில் இருப்பதால் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரெட் இருப்பதால் குடலில் நல்ல பாக்டீரியாக்களை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
  2. எளிதில் செரிமானமடைவதால் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. உடம்பில் இருக்கும் Pre- Radical-களை அழிப்பதற்கு உதவும் ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளது.
  3. குடலில் புற்று நோய் செல்கள் வளருவதை தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
  4. எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும், குடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
  5. இதில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதால் உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தத்தின் அளவை உடம்பில் அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.
  6. அவலுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சாலட் போல சாப்பிடுவதன் மூலம் எலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி சிவப்பு அவலில் இருக்கும் இரும்பு சத்தை குடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
  7. அவலை ஊறவைத்து அதனுடன் வெள்ளம், துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதன் மூலம் ரத்தத்தின் அளவை அதிகரிக்கவும் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.
  8. அவல் வயிற்று புண், வாய் புண், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.
  9. உடல் பருமனாக காரணமான கொழுப்பு அதிகரிப்பதால் ஏற்படும் இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் குறைக்க உதவுகிறது.
  10. அவலில் நார்ச்சத்து இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கவும் மற்றும் குளுக்கோஸ் அளவு உடம்பில் அதிகரிக்காமல் இருக்கவும் பயன்படுகிறது. குறைந்த அளவு Glycemic இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பசிக்கும் வேலையில் இந்த அவலை சாப்பிடலாம்.
  11. குழந்தைகளுக்கு இதனை பாலில் ஊறவைத்து, நாட்டுச் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து கொடுக்கலாம்.
  12.  சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் அவல் உப்புமா, சாலட் செய்து சாப்பிடலாம். அவலுடன் பால், நெய், மோர் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் தயிர் சேர்த்து சாப்பிட கூடாது. அப்படி அவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் மந்த நிலை ஏற்படும்.
    • 1192
    • More
    Comments (0)
    Login or Join to comment.