·   ·  1761 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 6.8.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: குடும்பத்தாரிடம் விவாதங்கள் வேண்டாம். உடல் அசதி, மனச்சோர்வு வரக்கூடும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். மன இறுக்கம் நீங்கி முகப்பொலிவுடன் காணப்படுவீர். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: மனதுக்கு இதமான செய்தி வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

கடகம்: திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பீர். பழைய கடனில் ஒரு பகுதி பைசல் ஆகும். சகோதரர்களால் பயனடைவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். தாயார், மனைவியின் உடல்நலம் பாதிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.

துலாம்: இடம் பொருள் அறிந்து செயல்படுவீர். பூர்வீக வீடு விற்பனையாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிட்டும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

விருச்சிகம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். வியாபாரத்தில் கடையை மாற்றியமைப்பீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

தனுசு: தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

மகரம்: வீட்டுக்கு புதிய பொருட்களின் வரவு உண்டு. எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களால் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பூர்வீக வீடு தொடர்பான வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களிடம் கனிவாக பேசுவார். வியாபாரம் திருப்திகரமான லாபம் தரும்.

மீனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 56
  • More
Comments (0)
Login or Join to comment.