இன்றைய ராசி பலன்கள் - 24.10.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான சில வழக்கு சாதகமாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மிதுனம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம்
விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதங்கள் உருவாகலாம். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை உருவாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கவனம் வேண்டும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். நெருங்கியவர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனம் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை மாற்றியமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நிலம்
விருச்சிகம்
உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். வியாபாரம் சிறப்பாக அமையும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் அமையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு