
இன்றைய ராசி பலன்கள் - 17.10.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
செயல்பாடுகளில் இருந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிதுனம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கடகம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
உறவுகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொழிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தை விரிவு செய்வதில் ஆலோசனை வேண்டும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமின் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மீனம்
சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தன வருவாய் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னுரிமை ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு