·   ·  1963 posts
  •  ·  0 friends

கடத்தல் வைரம்

ஹலோ மேடம்……நான் குப்பன் பேசறேன்…..

என்னது குப்பனா.. அபடின்னு யாரும் எனக்கு தெரியாதுங்க…

திரிசூலம் ரயில்வேஸ்டேஷன் பக்கம் இருந்து பேசறேன்…. ஒரு லேடீஸ் ஹாண்ட் பேக் ஒண்ணு ரயில் சீட்டுக்கு அடியில் இருந்து எடுத்தேன்….

ஆ…. ஆமாங்க அது என்னோடு தாங்க….

உங்க பேரு சங்கீதா தானே….

ஆமாங்க,…அண்ணா….

அதுலேஒண்ணு பாருங்க…அதன் வார் கட் பண்ணி இருப்பது பார்த்தா யாரோ ரயில்லே பிளேடு போட்டு இருக்காங்க மேடம்…. சத்தியமா அதுநான் செஞ்ச வேலை இல்ல…..

புரியுது அண்ணா……நான் ஏர் போர்ட்டி யிருந்துஅவசரம்அவசரமா ரயில் ஏறி வந்ததில் எவனோ ஒரு ராஸ்கல் பிளேடு போட்டு கட் பண்ணி இருப்பான்….

அதுலே பாருங்க…. கிழிந்து போன நூறுரூபாய் நோட்டு ஒண்ணு…வெளி நாட்டு ரூபாநோட்டு ஒண்ணு…. சில ரெக்கார்ட்….. பாஸ் போர்ட் ஒண்ணு….. அதுலே தான் உங்க அட்ரஸ்…போன் நம்பர்..,இவை எல்லாம் இருக்குது..

நீங்க சொல்றது நூத்துக்கு தொண்னூருசதவீதம்உண்மைங்க அண்ணா…

அப்பமீதி பத்து சதவீதம் எதுங்க…..

அதான் பேக் வாரு கட்டாகி போச்சே……இருந்தாலும் அந்த ஹாண்ட் பேக் எனக்கு வேணும்…என் லவ்வரு அன்பா எனக்கு கொடுத்த காதல் பரிசு அது….

சரி…சரி….. இப்ப அந்த பேக் உங்களுக்கு கண்டிப்பா வேணுமு ன்னு நினைக்கிறேன்…..

ஆமாண்ணா …..

இப்ப ரேட் பேசலாமா..

எதுக்கு அண்ணா ரேட்……

உங்களுக்கு அந்த பேக் வேணுமா……வேணாமா…

வேணும்……

அப்ப….மவுண்ட் ரோடிலே புகாரி ஓட்டலுக்கு எதிரிலே பத்தாயிரம்ரூபாயோட நில்லு……பேக்கைகொடுத்துட்டுவாங்கிக்கினு போறேன்..

இதுரொம்ப அதிகம் அண்ணா…..

உன்னோட பாஸ் போர்ட் உனக்கு வேணுமா வேணாமா……..

அதுவும் வேணும் ஹாண்ட் பேகும் வேணும்…. நீங்க சொன்ன படி அங்கேயே நிக்கறேன் சீக்கிரம் வந்துடுங்கஅண்ணா……

அப்பசரி ஆட்டோவிலே வரேன் அங்கேயே இரு…போனை கட் பண்றேன்.,…..****************************அரைமணி நேரம் கடந்தது.,…சங்கீதா அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது…அதிலிருந்துகுப்பன் ஹாண்ட் பேகுடன் இறங்கி…. ஆட்டோவை அனுப்பி விட்டு…அங்கு நின்று கொண்டு இருந்த சங்கீதாவை கண்டு பிடித்து அவளிடம்பேசினான்….

சங்கீதா குப்பனை அழைத்து கொண்டு ஒரு அசைவ ஓட்டலுக்கு சென்று,ஒரு ஸ்பெஷல் ரூமில் போய் அமர்ந்தார்கள் ….

குப்பனிடம் ஹாண்ட் பேக் பெற்று கொண்டு….. கத்தையாகஒரு ஐனூறு ரூபாய் கட்டை தூக்கி அவன் முன் போட்டு விட்டு,ரெண்டு 'டீ 'க்குஆர்டர் செய்து விட்டு குப்பனை பார்த்தாள்…. குப்பன் மிரண்டு போய் எதுக்கு மேடம் ஐம்பதாயிரம்……என்று மிரட்சியுடன் கேட்டான்…

நீங்க கொடுத்த இந்த பேக் மதிப்பு எவ்வளவு தெரியுமா……நான்கு கோடி….

என்ன நான்கு கோடியா…..

ஆமாம் உன் அரை பிளேடுஒன்றை கொடு….

குப்பன் கொடுக்க…. சங்கீதா அந்த ஹாண்ட் பேகின்அடி பாகத்தை கிழித்தாள்…..சிறு போட்டலம்ஒன்றை மெல்ல அதிலிருந்து துலாவிஎடுத்தாள்…, கார்பன்பேப்பரில் சுற்ற பட்டு இருந்த வைரகுவியலை கையில் கொட்டி காண்பித்தாள்….. கிட்டத்தட்ட இருபது வைரங்கள் அவள் கையில் ஜொலித்தது…. சங்கீதா பேச ஆரம்பித்தாள்….. மிஸ்டர் குப்பன்.. இது ஒவ்வொன்றும்பத்து கேரட்…அதாவது ஐந்து கிராம்…ஒன்றின் விலை மட்டும்இருபது லட்சம்……. எங்கள் நெட் ஒர்க் மிக பெரியது….. இதுவெல்லாம்வெளி நாட்டிலிருந்து கடத்த பட்டது…..

உங்கள் நேர்மைக்கு என் பாராட்டுதல் கள்….. திரிசூலம் விமான நிலையத்திலிருந்துஎங்கள் ஆட்கள்இதுபோல் கடத்தி கொண்டுவெளியே வரும் போது இனிமேல்அவர்களுக்கு உன்னைமாதிரி திருட்டு பசங்க தான் பாதுகாப்புதர வேண்டும்….. சம்மதமுன்னா சொல்லுங்க ஒரு மாசத்திற்குஒரு லட்சம் சம்பளம்கொடுக்கிறேன்…நீங்க இந்த நெட் ஒர்க்கில்சேருங்க ….. என்ன சொல்லுறீங்க …..இனிமேல் பிளேடு போடுற பசங்களை நீங்க கண் காணித்து துரத்துங்க…. ஓகே வா….

குப்பன் அவளை பார்த்து நகைத்தார்…எழுந்து நின்று கை தட்டினார்….. சபாஷ்……சங்கீதா இவ்வளவுவிஷயத்தை எந்தவொருஉடம்பு சேதாரமில்லாமல்ஒப்பு கொண்டதற்கு நன்றி சங்கீதா…. நான் சென்ட்ரல் சுங்க துறை ரிசர்வ் போலீஸ் அதிகாரி…ரொம்ப நாளா எங்களுக்கு வந்த இந்த மாதிரிகடத்தல் சம்பவ தகவல்கள் எல்லாம் பொய்…. எந்த வழியாக…எப்படி…. என்ற குழப்பத்தில் நாங்கள் இருந்தோம்……ஏதேதோ என நினைத்து கொண்டு இருந்தேன்….. இப்போது உன் மூலம் இந்த நெட் ஒர்க் எல்லாம் மாட்ட போகிறது. உன் பெருமை பீத்தலே உன்னையும் உன் கூட்டத்தையும் காட்டி கொடுத்து விட்டது……என குப்பன் கூறவும்…. ஸ்பெஷல் ரூமுக்கு வெளியே சென்ட்ரல் ரிசரவ் போலீசார் மூன்று பேர்கள் வந்து நிற்கவும் சரியாக இருந்தது… சங்கீதா கையும் களவுமாக பிடிப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டு… கொண்டு செல்ல பட்டாள்…

  • 47
  • More
Comments (0)
Login or Join to comment.