- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 13.9.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். தாய்வழி உறவினர் உதவுவர். சுபச்செலவுகள் அதிகரிக்கும். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களை பாராட்டுவார். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
மிதுனம்: யாரிடமும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர். மற்றவர்களை நம்பி முக்கிய பணிகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.
கடகம்: தடைகள் யாவும் நீங்கி வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். பணவரவு உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவாக இருப்பார்.
சிம்மம் : எதிலும் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுவீர். வெளிநாட்டு பயணம் உண்டு.வேற்று மதத்தினர் உதவி புரிவர். பிரபலங்களுக்கு நண்பராவீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
கன்னி: திட்டமிட்ட பணிகள் தடைபட்டு முடியும். உடல்நலத்தில் கவனம் தேவை. மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: இழுபறியாக இருந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மனக் குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் தொடர்பாக முடிவு எடுப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
விருச்சிகம்: குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். கூட்டுத் தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.
தனுசு: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மகரம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடும். அவ்வப்போது உங்கள் உடல்நிலை லேசாக பாதிக்கும். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: சேமிப்புகள் கரையும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதற விடாதீர். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சிறுகருத்து மோதல்கள் வந்து போகும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு அனைத்து வாடிக்கையாளர்களையும் கவருவீர்.
மீனம்: மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த பகை நீங்கும். கவுரவப் பதவி தேடி வரும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தரவும்.