
இன்றைய ராசி பலன்கள் - 11.8.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உருவாகும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
உணர்ச்சி வேகம் இன்றி செயல்படவும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்த இழுபறிகள் மறையும். சில அனுபவங்கள் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. கலைத்துறையில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
மனதளவில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் தோன்றும். உடன் பிறப்புக்களால் அலைச்சல் உண்டாகும். வியாபாரம் முடிவுகளில் பொறுமையை கையாள்வது நல்லது. மறைமுகமான பேச்சுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி
திடீர் தன வரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்து செல்லவும். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களால் கையிருப்புகள் குறையும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விருச்சிகம்
பயணங்கள் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். உறவுகள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
தனுசு
பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் உண்டாகும். சிந்தனையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மகரம்
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். பெருந்தன்மையான பேச்சுக்கள் மூலம் புதிய அறிமுகமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். அலுவலகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். சில விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும். புதிய விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மீனம்
குழந்தைகளின் செயல்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். நிர்வாக திறமைகள் அதிகரிக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். இனம் புரியாத சில எண்ணங்கள் மூலம் தடுமாற்றம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை