·   ·  653 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 1.12.2025

மேஷம்

மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி மக்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

ரிஷபம்

மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்விகள் நல்ல மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மிதுனம்

சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் மேம்படும். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களால் சில பணிகளை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கடகம்

உடன் பிறந்தவர்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். வருத்தம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

சிம்மம்

மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டும் நிங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில இழுபறிகளுக்கு பின்பு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கன்னி

சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

துலாம்

சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

விருச்சிகம்

பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்புங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சோர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

நினைத்த பணிகளில் இருந்த தடைகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மகரம்

சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறு துர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

கும்பம்

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மீனம்

அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவது புரிதலை உருவாக்கும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

  • 53
  • More
Comments (0)
Login or Join to comment.