·   ·  591 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் -16.11.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

நினைத்த பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். புதிய அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மிதுனம்

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

 

கடகம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான அனுபவம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

சிம்மம்

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். உடல் தோற்றப்பொழிவு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

மனதளவில் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

துலாம்

பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் மதிப்பை மேம்படுத்தும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொந்த பந்தங்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

தனுசு

செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

கும்பம்

வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுகமான சில தடைகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களால் சங்கடங்கள் நேரிடலாம். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

மீனம்

சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சக ஊழியர்களால் ஆதரவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

  • 79
  • More
Comments (0)
Login or Join to comment.