
கடன்
ஏம்மா... ஒரு ஐநூறு ரூபா கடனா கொடேன்...!?
யாரு... என்ட்டயா கேட்டீங்க...!?
ஆமா...!
எதுக்கு...!?
செப்பல் ரொம்ப தேஞ்சிப் போச்சி புதுசு வாங்கியே ஆகனும்... எழுநூறு,எட்நூறு ரேஞ்சிக்கு எடுத்தாத்தான் நல்லாருக்கும் மாசக் கடேசி என்ட்ட அவ்ளோ பணம் இல்ல... நீ ஒரு 500 கொடுத்தா புதுசு வாங்கிப்பேன் நீ ஒன்னும் சும்மா தரவேணாம் கடனா கொடு நாலு நாள்ல சம்பளம் வந்தவுடனே திருப்பிக் கொடுத்துடுறேன்...
கிரிடிட் கார்ட்ல வாங்கிக்க வேண்டியது தானே...!?
கிரிடிட் கார்ட யூஸ் பண்றதில்லன்னு நியூ இயர் ரெசல்யூசன் எடுத்துருக்கேன்...
இன்னும் நியூ இயரே வரலயே...
நான் அட்வான்ஸ்சாவே ரெசல்யூசன எடுத்து கிட்டேன்... இப்ப 500 இருந்தா கொடு இல்லன்னா இல்லன்னு சொல்லு எதுக்கு இத்தனக் கேள்வி...
பணம் சம்பந்தப் பட்ட விஷயம்ங்க... கட்டுன புருஷனாவே இருந்தாலும் கேள்வி கேக்காம தரக்கூடாது...
இப்ப பணம் இருக்கா இல்லையா...?
இருக்கு தர்றேன்... ஆனா அதுக்கு வட்டி போட்டு திருப்பித் தரனும்...
வட்டியா... எவ்ளோ...?
எத்தன நாள்ல பணத்த திருப்பிக் கொடுப்பீங்க....?
நாலு நாள்ல சம்பளம் வந்துடும்.... வந்ததும் தந்துடுறேன்...
நீங்க ஐஞ்சாவது நாள் திருப்பிக் கொடுத்தா போதும் ஒரு நாளைக்கு 100 ரூபா வட்டி மொத்தம் வட்டி 500 அசல் 500 ஆகமொத்தம் 1000 ரூபாய ஐஞ்சாவது நாள் கொடுத்தாப் போதும்...
அடிப்பாவி.... அடுக்குமா...
இது தான் உலகம்... வேணும்னா வாங்கிக்குங்க இல்லன்னா ஆள விடுங்க...!
கிரிடிட் கார்டு காரனே பரவாயில்ல இவ்ளோ வாங்க மாட்டான் நான் கார்டையே யூஸ் பண்ணிக்கிறேன்...
ஏங்க... கிரிடிட் கார்டு காரன் வாங்குற வட்டி அவனுக்கு போயிடும் ஆனா நான் வாங்குற வட்டி நம்ம வீட்டுக்குள்ளயே பத்திரமா சுத்தும்...
பத்திரமா சுத்துனா பரவாயில்ல... ஆனா இங்க பணம் பாத்திரமாவும் துணியாவுமாத்தேனே சுத்தும்...
சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் தினம் 50 ரூபா வட்டி போட்டு 750 ஆ திருப்பி கொடுத்துடுங்க...
வேணாம்... இது ரொம்ப அநியாயமா இருக்கு...
எதுங்க அநியாயம்... இப்படி உங்கள்ட்ட வாங்குற பணம் ஒரு சேமிப்பாத்தான் இருக்கும் நம்மள மாதிரியான மிடில் கிளாஸ் இப்படியெல்லாம் பணத்த சேத்தாத்தான் உண்டு...
..............
என்ன பேச்சக் காணோம் பணம் வேணுமா... வேண்டாமா.,.!?
சரி கொடு...
ஏங்க... பணம் கைக்கு வந்த வுடனே பால் மாற மாட்டீங்களே...!?
அட... உங்கம்மா சத்தியமா 250 ரூபா வட்டியோட பணத்த திருப்பி கொடுத்துடுறேன்...
உங்க மேல நம்பிக்கு இல்லாமலெல்லாம் இல்ல பண விஷயம் பாருங்க அதான் திரும்ப திரும்ப கன்பார்ம் பண்ணிக்கிறேன்....
சரிம்மா... பணத்த கொடு....
இந்தாங்க பணம்.... ஏமாத்தாம திருப்பிக் கொடுத்துடுங்க... கொடுத்துடுங்க... கொடுத்துடுங்க....
சரிம்மா... ஏலம் விடாத....
உங்கள நம்புறேங்க...! ஏமாத்திடாதீங்க.,.!
ஐய்யோ...!
என்ன... என்னாங்க ஆச்சி...!
என் சட்டைப் பையில் ஒரு 500 ரூபா வச்சிருந்தேன் அதக் காணோம்...
அதாங்க இது..