·   ·  170 posts
  •  ·  0 friends

ஹிட்லரின் கடைசி நாள்

ஹிட்லர் வாழ்வின் இறுதி நாள் , ஏப்ரல்30, 1945ஆக இருந்த போதிலும், நீண்ட நாள் காதலியை திருமணஞ் செய்து கொண்ட நாள் என்ற காரணத்தால் ஏப்ரல் 29இன் முக்கித்துவத்தை இங்கே ஞாபகப்படுத்தியே தீர வேண்டும்.

தனது இறுதி நாளில் தன் மனைவியுடன் ஹிட்லர் தனது தலைமைக் கட்டிடமானFuhrerbunker என்று அழைக்கப்படும் பூமிக்கடியிலான நிலவறையில் தங்கியிருந்தார்.

இங்கேதான் இருவரும் இந்த நாளில் கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர் . ஹிட்லர் தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார் என்றும் எவா சாயனைட் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் நம்பப்படுகிறது

இந்த நாளில் சோவியத் இராணுவம் ஜெர்மனியின் தலைநகரான பேர்லினை முற்றுகையிட்டிருந்தது.

அவர்களது உடல்களை அவரது ஆணைக்கிணங்க உடனே எரித்தனர். சோவியத் படையினரிடம் உடல்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே ஹிட்லரின் ஆணை.

இந்தச் சம்பவத்தால், நாசி ஜெர்மனியின் முடிவும், இரண்டாம் உலகப் போர் சில நாட்களில் முடிவடைந்ததற்கான துவக்கமும் ஏற்பட்டது.

  • 1435
  • More
Comments (0)
Login or Join to comment.