·   ·  138 posts
  •  ·  0 friends

சமையல் டிப்ஸ் உங்களுக்காக....

1. ரவை வாங்கி வந்தீர்கள் என்றால் சிறிது வறுத்து பின் டப்பாவில் வைத்தால் வண்டு, புழு வராமல் இருக்கும்.

2. சேமியா தனியாக வேக வைக்கும்போது சிறிதளவு கொதிக்கும் நீரில் எண்ணெய் சேர்த்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

3. சேமியா உப்புமா செய்யும்போது சேமியாவை வறுத்து செய்தால் மணமாகவும் இருக்கும் ஒட்டாமலும் இருக்கும்.

4.சைனீஸ் நூடுல்ஸ் வேக வைக்கும்போது நூடுல்ஸ் வெந்தவுடன் நீரை சல்லடையில் வடித்து , குழாயின் நீர் ஓட்டத்தில் சிறிது நேரம் வைத்தால் அதிக சூடு காணாமல் போகும் மற்றும் நூடுல்ஸ் ஒட்டாது .

5. இட்லிக்கு மாவு ஆட்டியபின் மறுநாள் அவிப்பதற்கு தேவையான மாவை ஒரு பாத்திரத்தில் உப்புடன் சேர்த்து கலந்து வைக்கவும் மறுநாள் கரண்டியால் முழுதும் கலக்காமல் அப்படியே எடுத்து இட்லி வைத்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.

6.இட்லி தோசை மாவு - முதல் நாள் இட்லி, மறுநாள் தோசை , மூன்றாம் நாள் மீதம் உள்ளதில் இரவு ரவை கலந்து மறுநாள் ரவை தோசை , மீதம் மாவு புளிப்பாக இருந்தால் கடுகு, கடலை பருப்பு தாளித்து கார பணியாரம் என அசுத்துங்களேன்.

7. வீட்டில் பர்கர் செயும்போது கடைகளில் இருப்பது போல் பன் மிருதுவாக இல்லை என்ற கவலை வேண்டாம் சிறிது நேரம் இட்லி தட்டில் வேக வையுங்கள் . அப்புறம் பாருங்கள் !!!!!!!!.

8. உருளை கிழங்கு சிப்ஸ் மொறு மொறுப்புடன் இருக்க எப்பொழுதும் பழைய சற்று காய்ந்த கெட்டியான கிழங்கை உபயோகபடுத்தவும் .

9. திடீர் விருந்தாளி உப்புமாவுக்கு மாற்று - அரிசியை பொன்னிறமாக சிறிது சோம்புடன் வறுத்து பொடித்துக்கொள்ளவும் தேவையான நீரில் மிருதுவான களி கிண்டி கொள்ளவும். இவற்றுடன் துருவிய தேங்காய், நெய், சர்க்கரை வாழைப்பழம் பரிமாறவும் - பாரம்பரிய உணவு சுவையுடன் தயார்.

10. மிருதுவான சப்பாத்தி - மாவையும் உப்பையும் சலித்து கொள்ளவும் . பிறகு வெதுவெதுப்பான நீரில் மாவு பிணையவும். மாவு பிணைந்தபின் கட்டாயம் 20 நிமிடம் ஓய்வு விடவேண்டும் ,பிறகு மிருதுவான சப்பாத்தி தயார் செய்யவும் .

11. குழம்பு அல்லது குருமாவில் உப்பு அதிகம் சேர்த்து விட்டதா கவலை வேண்டாம் ஒரு உருளை கிழங்கை இரண்டாக வெட்டி குழம்பில் போட்டு வேக வைக்கவும் கிழங்கு உப்பை உறிஞ்சிவிடும்.

12. பிரியாணி , புலாவ் அல்லது குருமா செய்யும்போது தீய்ந்த / கருகிய வாடை வந்தால் சிறிது பட்டையை வறுத்து பொடித்து போட்டால் வாடை அகன்று விடும் .

13. வெங்காய ஊத்தப்பம் / தோசை பிரியர்களா - நறுக்கிய வெங்காயத்தை தனியாக கடுகு, கடலை பருப்பு கொண்டு தாளித்து பின் சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்.

14. முள்ளங்கியை துருவி , பிழிந்து , பின் வாணலில் சிறிது என்னை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வணக்கி சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து , சப்பாத்தியில் புகுத்தி சமைத்தால் சுவையான வட இந்திய மூளி பரதா தயார் .

15.. இட்லி மீதம் உள்ளதா - எண்ணெயில் இட்லி துண்டுகளை பொறித்து கொள்ளவும் , பிறகு இஞ்சி பூண்டு , வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய் முறையே எண்ணெயில் வணக்கி சிறிது மிளகாய் தூள், உப்பு, தக்காளி சாஸ் , சர்க்கரை கொத்தமல்லி, சேர்த்து நல்ல கலவை தயார் செய்து அதில் பொரித்த இட்லியை சேர்த்தால் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.

  • 1136
  • More
Comments (0)
Login or Join to comment.