நல்லெண்ணெய் தரும் நன்மைகள்
நல்லெண்ணெய் ! எள் , நெய் என்ற சொற்களின் கூட்டாக பிறந்தது , எண்ணெய் . எள் என்ற தானியத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நெய்யை குறிப்பது தான் இது . ஆனால் , எண்ணெய் என்பது எல்லா வகை தாவர எண்ணெய்களையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகிவிட்டது . எள் தானியத்தில் எடுக்கப்படுவதை குறிக்க , ' நல்லெண்ணெய் ' என்ற சொல் பயன்படுகிறது . உடல் நலத்துக்கு உகந்தது என்பதால் , ' நல்ல எண்ணெய் ' என்ற பொருள் தருகிறது . தமிழகத்தில் , சமையலில் அதிகம் பயன்படுகிறது நல்லெண்ணெய் .
ஆசியா கண்ட பகுதியில் , சீனர் , கொரியர் , ஜப்பானிய குடும்பங்களிலும் இதை அதிகம் உபயோகிக்கின்றனர் .
தமிழர்மருத்துவம் மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது . இதன் மகத்துவம் பற்றி பார்போம் ... அடிக்கடி உணவில் நல்லெண்ணெயை சேர்த்தால் உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும் . உடல் சூட்டை தணிக்கும் . சீராக வியர்வை வெளியேற உதவும் . இதில் , ' சீசேமோல் ' என்ற பொருள் இதய நோயை தடுக்கிறது . மக்னீஷியம் சத்து , நீரிழிவு நோயை தடுக்கும் . இதில் உள்ள ஜிங்க் சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவும் . குடலியக்கம் சீராக நடக்கும் . செரிமானப் பிரச்சனையை தீர்க்கும் .