- · 0 friends
போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை
கேரளாவில் 'ஆபரேஷன் தூஃபான்' என்ற தீவிர போதைப்பொருள் ஒழிப்பு வேட்டையின் கீழ், கோழிக்கோடு மாவட்டத்தில் மூன்று பள்ளி ஆசிரியைகள் எம்.டி.எம்.ஏ.போன்ற ரசாயன போதைப்பொருட்களை விற்ற வழக்கில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் வடகரை மற்றும் பேராம்ப்ரா பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பின்வரும் மூன்று ஆசிரியைகள் இந்த போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் நேரடியாக ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்:
கே.சி.கீர்த்தனா (உடற்கல்வி ஆசிரியர்)
கே. காவ்யா (ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்)
வி.பி.நீஷ்மா(பி.ஆர்.சி பயிற்றுவிப்பாளர்)
வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒரு மொபைல் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆசிரியர்களே போதைப்பொருள் கடத்தல்காரர்களாக மாறியுள்ளது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டிய ஆசிரியர்களே இப்படி இருந்தால்,மற்றவர்களை என்ன சொல்வது?
இந்த நெட்வொர்க்கில் இன்னும் பிற ஆசிரியர்கள் மற்றும் வேறு எவருக்கும் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.