·   ·  345 posts
  •  ·  0 friends

பணக்காரரின் சாமார்த்தியம்

நண்பர் ஒரு பாங்குக்குள் நுழைகிறார் .

மேனேஜரிடம் " எனக்கு 5000/ கடன் வேணும் " என்கிறார்.

"உங்களை எனக்குப் பழக்கமில்லை ஏதாவது Collateral

குடுத்தா கடன் தரோம் "

" பேங்க் வாசலில் என்னுடைய புத்தம் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குது. ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ் உள்ளேயே இருக்கு . அதை அடமானம் வச்சுக்கிட்டு கடன் குடுங்க "என்றார் நண்பர்.

கடன் உடனே வழங்கப்பட்டது . பாங்க் டிரைவர் காரை பத்திரமாக ஓட்டிச்சென்று பேஸ்மெண்டுல நிறுத்துகிறார் .

மானேஜரும் ஊழியர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

"வெறும் 5000துக்கு இவ்ளோ காஸ்டலி காரை அடமானம் வச்சுட்டுப் போறாரே ? ரொம்ப அப்பாவி ."

பல கோயில்கள் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டு, ஒரு மாதம் கழித்து வந்து 5000 + வட்டி 39 ரூபாய் கட்டி, வண்டியை எடுத்துக் கொள்கிறார் நண்பர்

" ஏன் சார் இவ்ளோ சின்ன தொகைக்கு இவ்ளோ காஸ்டலி காரை அடமானம் வச்சீங்க "ன்னு கேக்கறார் மானேஜர்.

" 39 ரூபாய்க்கு வேற யாரு சார் இந்த 2 கோடி காரை இவ்ளோ ஜாக்கிரதையா ஒரு மாசம் பாத்துப்பாங்க ?" என்றார் நண்பர்.

  • 317
  • More
Comments (1)
    Login or Join to comment.