·   ·  1697 posts
  •  ·  0 friends

இன்டர்வியூவில் தேர்ச்சி

கேசவன்ஒரு பொறியியல்பட்டதாரி….. சரியான வேலை கிடைக்காமல் பெரும் இன்னலைஅனுபவித்தான்….. குடும்பத்தில் வேண்டாவெறுப்பாக தான் அவன்காலம் போய் கொண்டிருந்தது…அவனை, அவன் தாயைதவிரஎவருமே,மதிப்பதில்லை, கிட்ட தட்ட பத்துக்கும் மேற்பட்டகம்பெனிகளுக்குஇன்டெர்வியூ க்கு சென்றும் அவன் கெட்ட நேரம், அவனுக்கு வேலை கிட்டவில்லை..தன்னை ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன் என்று நினைத்து வெதும்பினான்.. பக்கத்து வீதியில்……எப்போதோ. எவரோ கட்டிய ஒரு சிறிய விநாயகர் கோவில் கேட்பாரற்று கிடந்தது….கேசவன்மட்டும்,போகும் போதும்வரும்போதும்விநாயகனிடம்தன் கஷ்டத்தை சொல்லி, வேண்டி புலம்பி கும்பிட்டு விட்டு.. ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கி கொளுத்திவிட்டு செல்வான்….

நெடுங்காலாமாக இப்படி செய்து வந்தான்…. தனக்கு விநாயகன் ஒருவழியை….கண்டிப்பாககாட்டுவான் என நம்பினான்…. ஒரு நல்ல இரத்தின கற்களை பட்டை தீட்டி. அழகு படுத்தி ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பெனிக்குJ.M.D……பதவிக்குஆள் தேவை பட்டது….. விண்ணப்பம் போட்டு பார்க்கலாம் என ஒரு விண்ணப்பம் அனுப்பினான்….. இன்டெர்வியூ க்கு வருமாறு கடிதம் வந்தது…. ஏதோ போய் பார்க்கலாம் என கருதி புறப்பட்டான்…

இன்டெர்வியூ கடிதத்தை கையில் எடுத்து கொண்டு விநாயகர் கோவிலுக்கு சென்று மனமுருகி வேண்டி, கற்பூரம் ஏற்றி விட்டு இன்டெர்வியூ கடிதத்தைஅவர் முன் வைத்தான்…. விநாயகா…இன்னும் என்னை சோதிக்காதே.. ஒரு நல்ல வழியை எனக்கு காட்டு.. .. என,கண்ணை மூடிக்கொண்டு வேண்டினான்…அப்போது ஒரு சூறைகாற்று லேசாக அடிக்க. ….எங்கிருந்தோ கசங்கிய துண்டு பேப்பர் ஒன்றுபறந்து வந்துஅவன் மீதுவந்து விழுந்தது…. அதனை கீழே குனிந்து எடுத்து பிரித்து பார்த்தான்… அதில் மூன்று வரிகள் எழுத பட்டிருந்தது… ஏதோ மர்ம நாவல் தலைப்பு போல் அதில் இருந்தது.. முதல் வரி …. கும்மிருட்டு …. இரண்டாம் வரி எண்ஜான் உடம்பு.. ….. மூன்றாம் வரி ….. இடது கை மூன்றாம் விரல்கீழ் ……….குழம்பினான் கேசவன். என்ன இது… யார்இப்படிஎழுதி போட்டு இருப்பார்கள்.. ….என சுற்றும் முற்றும் பார்த்தான்….. யாருமில்லை…

ஏதும் புரியாமல் அந்த துண்டு பேப்பரை மேல் பாக்கட்டில் வைத்து கொண்டு இன்டெர்வியூ நடக்கும் இடம் நோக்கி புறப்பட்டான்…ஜூப்லிஸ்டோன்ஸ் மிக பழமையான இரத்தின கற்களைபட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பெனி. . நானூறுபேருக்கு மேல் அங்கு பணி செய்கிறார்கள்…. அதன் MD. ராகவன் அதன்உரிமையாளர் சிவ பாதம்…பெயருக்கு தகுந்தாற்போல் பக்தி மான் .. அதன் முகவரியை தேடிக்கொண்டு போனவன் மிரண்டு போனான்.. இருனூறு பேருக்கு மேல் ஒரு பதவிக்கு வந்திருந்தார்கள். வேண்டாவெறுப்பாக,இன்டெர்வியூவில் கலந்து கொண்டு எழுத்து தேர்வு எழுதினான். ..

இரண்டு மணிநேரம் கழித்து முடிவு வந்தது. முதலிரண்டுஇடங்களில் மற்ற இருவரும் மூன்றாம் இடத்திற்கு கேசவனும் இடம் பெற்று, நேர்முகதேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது…. அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.,. இந்த மூன்று பேரையும்உள்ளே வர சொல்லி ராகவன் MD . அழைத்தார்.. எல்லோரையும் சோபாவில் அமர சொன்னஅவர்… உங்களிடம் என் முதலாளி பற்றிய ஒரு கதை சொல்ல போகிறேன்…. என்றார்….

என் முதலாளி மிஸ்டர் சிவபாதம்ஒரு கோட்டீஸ்வரர் …. சிறந்த பக்திமான்… அவர் அதிர்ஷ்டத்தின் மேல் பூரண நம்பிக்கை கொண்டவர்.. . அந்தஅதிர்ஷ்டம்தான் அவர் வாழ்க்கையில் அவரை உயர வைத்தது. .. இந்த JMD.. பதவி உங்களில் ஒருவருக்கு அப்படிதான் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்…. இந்த நேர்முக தேர்வு,எனவே உங்களிடம்அந்த அணுகுமுறை யில் தான் நடத்தப்படும்…. யாருக்கு இறைவன் அருள போகிறானோ பார்க்கலாம்…. என கூறி விட்டு மேஜையை திறந்து பழுப்பு நிற நெகிழி புட்டி ஒன்றை எடுத்து மேஜை மேல் வைத்தார்…. இதனை நீங்கள் இரண்டு நிமிடம் உற்று பாருங்கள். அந்தபுட்டிக்குள் என்ன நிற பொடி உள்ளது என நீங்கள் கூற வேண்டும்.. .. இது உங்கள் முதல் சோதனை என்றார்..

அந்த புட்டி பழுப்பு நிறத்தில் இருந்ததால் சரியாக கணிக்க முடியவில்லை…. முதல் நபர் சிவப்பு என்றார்……இரண்டாம் நபர் பச்சை …. என்றார்… . இப்போது கேசவன்யோசித்தான். …. அந்த துண்டு பேப்பரில்முதல் வரி நினைவில்வந்தது … கும்மிருட்டு .. என்ன நிறத்தில் இருக்கும். …. கருப்புநிறம் அல்லவா… கேசவன் அதை நினைவில் வைத்து கொண்டு……கருப்பு நிறம் என்றான்.. MD ஒரு பேப்பரில் அதனை மூடி திறந்து கொட்டினார்…. அதிலிருந்து கருப்பு நிற பொடி கொட்டியது….. கேசவனுக்கு முதல் வெற்றி….. ஒரு மதிப்பெண் கிடைத்தது….. கேசவன் விநாயகனை நினைத்து பக்தி பரவசத்தில் மிதந்தான்….

இரண்டாவது சோதனை…..MD மேஜையை திறந்து ஒரு நூல் கண்டை எடுத்தார்……அதன் முனையை பிடித்து கொண்டு தனது கையில் நூலை,எட்டு முறைசுற்றி அறுத்து மேஜை மேல் போட்டார்……இப்போது சொன்னார், நான் அறுத்து போட்ட நூலை மேஜை மேல் நீட்டி வைக்கிறேன்…நீங்கள்,அதனை கண்ணாலேயே அளந்துபார்த்து. எத்தனை செண்டிமீட்டர் உள்ளது என சொல்லுங்கள். சரியாக சொல்ல வேண்டும்என்று இல்லை ஓரிரு செ. மீ ம்.. கூடலாம்… குறையலாம் … என்று மூன்று பேரையும் பார்த்து சொன்னார்…. அவர்களும் கண்ணால் ஒரு மூன்று நிமிடங்கள் பார்த்தனர்…. முதல் நபர் 150செண்டிமீட்டர் என்றார். ……இரண்டாம் நபர் 160செ. மீ. என்றார்…. இப்போதுகேசவன்முறை.. கொஞ்சம் யோசித்தான்,.. துண்டு பேப்பரின் இரண்டாவது வரி ….. எண்ஜான்உடம்பு .. உச்சியிலிருந்து பாதம்வரை ஜாண்போட்டு நம் கை வைத்து அளந்தால். எட்டு ஜாண் அளவேஇருக்கும். ….. தன்னுடைய உயரம் 167செண்டிமீட்டர் தானே….. ஆண்டவன் விட்ட வழி.. ….. அதையே சொல்வோம் என,சொன்னான்.

MD ராகவன்அளந்து பார்த்து விட்டு அதிசயித்துபோனார். ……. சரியாக 167செ. மீ இருந்தது.. அவரே எழுந்து கேசவனுக்கு கை கொடுத்து குலுக்கினார். ….. கங்கிராலேஷன்ஸ் மிஸ்டர் கேசவன். நீங்கள் JMD ஆகிவிட்டீர்கள்……என்று வாழ்த்தினார்…பிறகு மற்ற இருவரையும் பார்த்து நீங்கள் அறிவு திறன் போட்டியில் நன்கு எழுதி முதலிரண்டுஇடங்களை பெற்று உள்ளதால் உங்களை இழக்க இந்த நிறுவனம்விரும்ப வில்ல.. எனவேஉங்களுக்குபோர்மேன். வேலைஇங்கே உள்ளது அது உங்களுக்கு. எனசொல்ல கட்டிடம் அதிறமூவரும்கை தட்டினார்கள். .

பின்புஅவர் சொன்னார்…சரி உங்கள் மூவருக்கும் வேலை கிடைத்து விட்டது வாழ்த்துக்கள் அப்படியே அமருங்கள்…. மூன்றாவதுஒரு சின்ன சோதனை…. அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்.. எட்டு டிஜிட்டல் எண்களைஇரண்டு டிஜிட்டல் எண்களால் வகுக்க வேண்டும். . டிவிடென்ட் சரியாக வேண்டும் மீதி இருக்க கூடாது உதாரணத்திற்கு 24024024÷24=இப்படி.. இந்த அட்டையில் இட பக்கம் பத்து கணக்குகள்….. வலதுபக்கம்,பத்துகணக்குகள் உள்ளது….. அதில் ஒன்று தான் டிவிடென்ட்சரியாக இருக்கும்……மற்றவைக்குமீதம் வரும்.. உங்களுக்கு ஐந்து நிமிடம்டைம் தர்றேன்…. கண்ணாலேயே பார்த்து மன கணக்கு போட்டு,எது சரியாக வகுப்படும் என கணித்து என்னிடம் கூறுங்கள்…. கால்குலேட்டரில் போட்டு பார்க்கலாம்…. என்றார்….

அந்த அட்டையில் இடக்கை பக்கம் பத்து… வலக்கை பக்கம் பத்து இருப்பதை மூவரும் பார்த்தார்கள் பெரும்பாலும் வகுபடாமலேயே இருந்தது…. முதல் நபர் வலது கை பக்கம் ஆறாம் கணக்கை தேர்ந்து எடுக்க அது வகுப்படவில்லை….. இரண்டாம் நபர் இடது ஐந்தை சொல்ல… அதுவும் தப்பாக போனது…. கேசவன் துண்டு சீட்டின் மூன்றாம்வரிக்கு விடை கண்டுபிடித்து விட்டான்… அது அந்த அட்டையில் இடது கை பக்கம் கீழே இருந்து மூன்றாவதாக இருந்தது ……. இதையும் சொன்ன கேசவனுக்கே வெற்றி கிடைத்தது. MD ராகவன்மூவருக்கும் பணி உத்தரவு வழங்கி ஆபிஸ் வேன் ஒன்றில்ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

கேசவன்நான்கு வருடத்தில் அறுபது லட்சம்செலவு செய்து அந்த தெருவிலேயேஒரு மனை வாங்கி தெரு விநாயகரைஅங்கு வைத்து அழகான ஒரு கோவில்கட்டி ஜூப்லி. ஸ்டோன்ஸ்மூலம் கோட்டீஸ்வரன்ஆனான்

  • 159
  • More
Comments (0)
Login or Join to comment.