 
                    கிளி ரகசியம்
பழனி முருகன் கையிலுள்ள தண்டத்தில் ஒரு கிளி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் ரகசியம் என்ன தெரியுமா?
முருக பக்தரான அருணகிரி நாதர் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். அதற்காக சூழ்ச்சி செய்து பிரபு தேவராயன் என்னும் மன்னன் மூலமாக அருணகிரி நாதரை தேவலோகம் அனுப்பி பாரிஜாத மலர் பறித்து வருமாறு கட்டளையிடச் செய்தான்.
அருணகிரி நாதர் தன்னுயிரை ஒரு கிளியில் உடலில் செலுத்தி தன் உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்தி விட்டு தேவலோகம் புறப்பட்டார்.
இதற்கிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்து விட்டான். கிளி வடிவில் பூலோகம் வந்த அருணகிரி நாதர் தன் உடல் காணாமல் போனதைக் கண்டு திகைத்தார்.
அவருக்கு அருள் செய்த முருகன் தண்டத்தில் கிளியை அமர்த்திக்கொண்டார். இதன் பின்னரே பழனி முருகனின் தண்டத்தில் அருணகிரியார் கிளி வடிவில் காட்சி தருகிறார்.
 
    
    
    
    
    
 
            
            
         Home
                Home
            