·   ·  531 posts
  •  ·  0 friends

ஆல்பகோடா பழம்

ரஷ்யாவிலுள்ள சாமர்கண்ட் புக்காரா போன்ற பகுதிகளில் இருந்துதான் இந்தப் பழம் உலக நாடுகளுக்குப் பரவியது. இந்த பழத்தின் உண்மையான பெயர் "ஆல்புக்காரா' என்பதாகும்.

மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்தப் பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் விட்டமின் ‘ஏ’,‘பி’ உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். குருதியை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியைக் குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு உடனடியாகக் குணமடையும்.

  • 89
  • More
Comments (0)
Login or Join to comment.