·   ·  1068 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 18.2.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பணவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். அலைச்சல் குறையும்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார விஷயமாக இருந்த டென்ஷன் விலகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வரக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர்.

சிம்மம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் குழப்பங்கள் தீரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். லாபம் உண்டு.

துலாம்: எதிர்பார்த்த வகையில் பணவரவு இருக்கும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். கூடுதல் பொறுப்பு சேரும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

விருச்சிகம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியம் கை கூடி வரும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். லாபம் பார்க்கலாம்.

தனுசு: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழில் போட்டி குறையும். ஓரளவு லாபம் கிட்டும்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

கும்பம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

  • 47
  • More
Comments (0)
Login or Join to comment.