·   ·  979 posts
  •  ·  0 friends

கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

கருஞ்சீரகப் பொடியாக்கி வெந்நீர், தேன் கலந்து பருகலாம்.இதனால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரையும்.

பொடியை 50 மி.லி.தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் 2 சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.

ஒரு தேக்கரண்டி பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதோடு தேன் சேர்த்து சாப்பிட, நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி அகலும்.

குளியல் பொடிகளில் கருஞ்சீரகப் பொடியை கலந்து பயன்படுத்தலாம்.

கரப்பான், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்க்கு, கருஞ்சீரகப் பொடியை தேய்த்துக் குளிக்கலாம்.இதனால் நோய் தீவிரம் குறையும்.நோயால் ஏற்பட்ட புண்கள், தழும்புகள் மறையும்.

வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்து பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு நேரத்தில் குடிக்க வேண்டும்.இதற்குப் பிறகு வேறு உணவு சாப்பிடக்கூடாது.இப்படி செய்தால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும். தேவையற்ற கொழுப்பு குறையும்.இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும்.

பொடியை தண்ணீரில் கலந்து குடிக்க, வயிற்றுப் புண்கள் குணமாகும்.

பொடியை மோரில் கலந்து குடித்தால், தொடர்ந்து நிற்காமல் வரும் விக்கல் கூட நின்று விடும்.

பொடியை வெந்நீரில் அருந்தி வர மலச்சிக்கல் தீரும்.

தேவையற்ற உடல் எடையைக் குறைக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது.

கருஞ்சீரக எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளிக்க, தலைமுடி கொட்டுவது குறைந்து, முடி வளர்ச்சி அடையும்.

பொடியை பாலில் கலந்து முகத்தில் பூசி வர, முகப் பருக்கள், கொப்புளங்கள், புண்கள் மறையும்.

கருஞ்சீரகப் பொடியோடு கொத்துமல்லி பொடி சேர்த்து வெந்நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர, செரிமானக் கோளாறுகள் மற்றும் வாயுத்தொல்லை நீங்கும்.

கருஞ்சீரகம் சிலருக்கு வெகு அரிதாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும்.எனவே பயன்படுத்தும் போது இத்தகையத் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று பரிசோதித்து விட்டு, பயன்படுத்துவது நல்லது.

தகவல் : இணையத்தில் இருந்து எடுத்தது.

  • 86
  • More
Comments (0)
Login or Join to comment.