2026 பிப்ரவரி இன் சிறப்பு
2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைதளங்களில் தற்போது 'பெர்பெக்ட் பிப்ரவரி' என்ற பெயரில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம், காலண்டரில் அமைந்துள்ள ஒரு அபூர்வமான மற்றும் கச்சிதமான ஒழுங்குமுறையாகும். 2026 ஒரு லீப் ஆண்டு அல்ல. அதனால், அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வழக்கம்போல 28 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த 28 என்ற எண் 7-ஆல் சரியாக வகுபடக்கூடியது என்பதால், பிப்ரவரி மாதம் முழுமையாக நான்கு வாரங்களாக பிரிந்து அமைகிறது.
முக்கியமாக, 2026 பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதனால் மாதத்தின் கடைசி நாள் பிப்ரவரி 28-ம் தேதி சனிக்கிழமை முடிகிறது. காலண்டரை நேரில் பார்த்தால், இந்த பிப்ரவரி மாதம் எந்த இடையூறும் இல்லாமல் செவ்வக வடிவில் மிக அழகாக அமையும். எந்த ஒரு நாளும் அடுத்த வாரத்திற்கு தள்ளப்படாமல், நான்கு வரிசைகளில் சரியாகப் பொருந்தி இருப்பதே இதன் சிறப்பாகும்.