·   ·  1529 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 8.6.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நிமித்தமான எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். சுபகாரிய சிந்தனைகள் மேம்படும். மனதில் திருப்தியின்மையான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். செய்கின்ற முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

சிம்மம்

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். சமூக பணிகளில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

துலாம்

செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபம் அடைவீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

விருச்சிகம்

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுகள் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். சுபகாரிய தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்களும் காலதாமதங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைதுறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மீனம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார தொடர்பான வெளியூர் பயணம் கைக்கூடும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். இணையம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

  • 57
  • More
Comments (0)
Login or Join to comment.