சுவாமி விவேகானந்தர் தலைப்பாகை கட்டியது எப்போது?
சுவாமி விவேகானந்தர் ராஜஸ்தானுக்கு ஒரு முறை சென்றிருந்தார். பாலைவனங்கள் நிறைந்த பகுதியான அங்கு கடும் வெப்பம் நிலவியது. வெயிலின் கொடுமையால் 'லூ' என்ற நோய் மக்களை வாட்டிக் கொண்டிருந்தது.
அதிலிருந்து காத்துக் கொள்வதற்காக அவர்கள் பெரிய தலைப்பாகை கட்டிக் கொண்டனர்.
விவேகானந்தரை அந்நோய் தாக்காமல் இருப்பதற்காக தலைப்பாகை கட்டிக் கொள்ளச் சொன்ன அரசர், தானே அவருக்கு தலைப்பாகை கட்டி விட்டார். அதோடு தலைப்பாகை கட்டும் விதம்பற்றியும் சொல்லிக் கொடுத்தார். அன்று முதல் தலைப்பாகை கட்ட ஆரம்பித்தார் சுவாமி விவேகானந்தர். பின்பு அதுவே அவரது அடையாளமாகவும் ஆகிவிட்டது.