·   ·  140 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 10.8.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். நண்பர்களின் எண்ணங்களை அறிவீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பணி புரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். ஆக்கபூரவமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

ரிஷபம்

எதிர்காலம் சார்ந்த கவலைகள் குறையும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேம்படும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

மிதுனம்

சிந்தனைகளில் புதிய பொலிவுடன் செயல்படுவீர்கள். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். ஓய்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கடகம்

வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் சிறு சிறு வேறுபாடுகள் உண்டாகும். தன விஷயங்களில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

சிம்மம்

உடன்பிறந்தவர்கள் வழியில் நன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை ஏற்படும். துணைவர் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பிற மத மக்களின் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

கன்னி

சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். புதுமையான சிந்தனைகள் மனதில் தோன்றும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

தடையாக இருந்தவர்கள் பற்றி அறிவீர்கள். தாயார் வழியில் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் வழியில் நிம்மதி கிடைக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

தனுசு

தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உறவுகள் வழியில் சில புரிதல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

மகரம்

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்த மந்த தன்மை விலகும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

கும்பம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மீனம்

உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணி புரியும் இடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

  • 1419
  • More
Comments (0)
Login or Join to comment.