சாப்பிட கைகளை பயன்படுத்தும் இந்தியர்கள்
இந்திய ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஒரு முறை பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை சந்தித்தார். சாப்பிடுவதற்கு முன்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கைகளை கழுவி, உணவு பரிமாறப்பட்டவுடன், அவர் தனது கைகளை சாப்பிடுவதற்கு பயன்படுத்தினார்.
சர்ச்சில் இந்திய ஜனாதிபதியிடம், “நீங்கள் ஏன் உங்கள் கைகளைப் பயன்படுத்துகிறீர்கள்? ஸ்பூன் மற்றும் முட்கரண்டிகளை பயன்படுத்துங்கள், அவை மிகவும் சுகாதாரமானவை ”.என்றார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் உடனே , "இதற்கு முன் யாரும் சாப்பிட என் கைகளைப் பயன்படுத்தாததால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய எந்த கரண்டியையும் விட என் கைகள் மிகவும் சுகாதாரமானவை." என்று பதிலளித்தார்.
இந்தியாவில் உணவை கையால் சாப்பிடுவது தான் பாரம்பரிய வழக்கம். ஒருவர் உணவை கையால் சாப்பிடும் போது, உணவு, உடல், மனம், மற்றும் ஆன்மா என அனைத்தையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இது சாப்பாட்டு இங்கிதத்தை மென்மையாக்குகிறது.
உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரார்வத்தைத் தூண்டும் ஒரு உணர்வுபூர்வமான அனுபவமாகும். ஆயுர்வேதத்தின் படி, கையில் உள்ள ஒவ்வொரு விரலிலும் ஐந்து கூறுகள் இருக்கிறதாம்.
அதில் பெருவிரல் - ஆகாயம், ஆள்காட்டி விரல் - காற்று, நடுவிரல் - நெருப்பு, மோதிர விரல் - தண்ணீர், சுண்டு விரல் - நிலம் ஆகும். கையால் உணவை சந்தோஷமாக சாப்பிடும் போது, இந்த ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.
ஒருவரது உடலில் இந்த ஐந்து கூறுகளும் சமநிலையில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஐந்து கூறுகளும் ஒருவரது சுறுசுறுப்பை அதிகரிக்கும். அதாவது கையால் உணவை உட்கொள்ளும் போது, உணவின் சுவை, தோற்றம் மற்றும் மணம் போன்றவை மேம்பட்டு இருக்கும்.
உணவை உட்கொள்ளும் முன் கையை நீரில் கழுவிய பின் சாப்பிடுவதால், கையில் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. மேலும் நாம் ஒரு நாளைக்கு பலமுறை கைகளை நீரில் கழுவுவோம்.
ஆனால் ஸ்பூன், போர்க் மற்றும் இதர பொருட்கள் அடிக்கடி கழுவப்படுகிறதா என்பது நமக்கு சரியாக தெரியாது. மேலும், அது மிகவும் சுத்தமானவையாக இருக்கும் என்றும் உறுதியாக கூறவும் முடியாது
எனவேதான், பெரும்பாலான இந்தியர்கள் வெறும் கையில் உண்ணுகிறார்கள். ஆனால் , இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் சில மேல்தட்டு மக்கள் கரண்டிகளைத்தான் தற்போது உணவு உண்ண பயன்படுத்துகிறார்கள்.