·   ·  683 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 7.12.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மேலதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

ரிஷபம்

இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணத்தால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மிதுனம்

உறவுகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

கடகம்

நெருக்கமானவர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தையும் உழைப்புகள் அதிகரிக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை

 

சிம்மம்

தந்திரமாக சில பணிகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகளும் மேம்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

கன்னி

உடன் இருப்பவர்களால் பொறுப்புக்கள் மேம்படும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றங்கள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பெறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

 

துலாம்

நண்பர்கள் இடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். பெருமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

 

விருச்சிகம்

மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். சிறு சிறு வதந்திகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

சுப காரிய செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

மனதளவில் புதிய தெளிவுகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். நன்மை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

கும்பம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உயர்கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மீனம்

நினைத்த பணிகள் தாமதமாக நிறைவேறும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் தவறிய சிலர் பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 151
  • More
Comments (0)
Login or Join to comment.