- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 25.11.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: அடுக்கடுக்காக இருந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். முன்கோபம் நீங்கும். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். பங்குதாரர்கள் ஆதரிப்பர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கையிருப்பு கரையக்கூடும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் கவனம் தேவை.
மிதுனம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றி விட்டு புதிது வாங்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய நினைவுகளில் மூழ்குவீர். சிலர் நன்றி மறந்து பேசுவர். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தருவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
சிம்மம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
கன்னி: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். சகோதர சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: பிள்ளைகளால் கையிருப்பு கரைய வாய்ப்பு உண்டு. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளிவட்டாரம், வியாபாரத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் ஒரு வேலையை முடிக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.
விருச்சிகம்: அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பண வரவு திருப்திகரமாக இருக்கும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர்கள். சோர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சூடு பிடிக்கும்.
தனுசு: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
கும்பம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள், பணியாட்களின் ஆதரவு உண்டு. ஓரளவு லாபம் கிட்டும்.