·   ·  435 posts
  •  ·  0 friends

சீர்காழி பிரம்பு நாற்காலி

  • இருபுறமும் பிரம்புப் பொருள்களை போர்த்தியதுபோல் காட்சியளிக்கும் தைக்கால் கிராமம் சீர்காழி (தமிழ்நாட்டில்) அருகே உள்ளது.
  • தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாகப் பாரம்பர்ய பிரம்புப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றுவருகிறது
  • பிளாஸ்டிக் பொருட்களை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இப்பொருட்களுக்கு உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் சில பண்புகளும் உள்ளன.
  • முதலில் சாதாரண குடிசைத் தொழிலாக தொடங்கிய பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தற்போது இரண்டு கி.மீ தூரம் சாலையின் இருபுறமும் 200க்கும் மேற்பட்ட உற்பத்தி கூடங்களும் விற்பனையகங்களும் இயங்கி வருகின்றன.
  • தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது.
  • தைக்கால் கிராமத்தில் பிரம்பால் செய்யப்பட்ட நாற்காலிகள், ஊஞ்சல், சாய்வு நாற்காலிகள், குழந்தை நாற்காலிகள், தொட்டில்,சோபா செட்கள் மற்றும் அலமாரிகள்,பிரம்பு கூடைகள்,கைவினை பொருட்கள் போன்ற பல்வேறு விதமான பொருட்கள் செய்யப்படுகின்றன.
  • பிரம்பினால் ஆன நாற்காலி மற்றும் சோபாவில் உட்காரும் போதும், படுக்கும் போதும் உடல் சூட்டை பாதுகாத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • இந்த பிரம்பு பொருட்கள் உற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், சீயாளம், பெரம்பூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
  • சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளே அதிகம் பிரம்பு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
  • கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் விற்கப்படும் பிரம்பு வகைகள் ஐந்து வகையாக தரம் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சேர், முதியவர்கள் பயன்படுத்தும் சாய்வு நாற்காலி, சோபா செட் ஆகியவை கலை நயத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யப்படுகிறது.
  • இங்கு விற்கப்படும் பொருட்கள் ரூ.750 லிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
  • தைக்கால் பிரம்பிற்கு விரைவில் புலி சார் குறியீடு கிடைக்க உள்ளதால் இங்கு தயார் செய்யப்படும் கைவினைப் பொருட்களின் விற்பனை சூடு பிடிக்கும் என நம்பப்படுகிறது.
  • 499
  • More
Comments (0)
Login or Join to comment.