·   ·  1872 posts
  •  ·  0 friends

கலங்க வைத்த கடிதம்

கணேஷ்ஆபிசிலிருந்துசீக்கிரமே…வீட்டிற்கு வந்து விட்டான்…. வீட்டினுள்ளேஅவன் நுழைந்ததுமே,அவங்கம்மா பார்வதி அவனை நிற்க சொன்னாள்….. தன் மனைவி அனுஜாவை பற்றி ஏதாவது ரிப்போட் தானே சொல்ல போறாங்க…. கேட்டுட்டு படுக்கையில் போய் ரெஸ்ட் எடுக்கலாம்….. எப்போதும் பாடும் பாட்டு தானே….இப்போதும் அதே தான்… கால்யாணம்ஆகி இந்தரெண்டு வருஷத்தில் தன் மனைவி பற்றி குறைசொல்லாத நாளே இல்லை….வயதாக ஆக இந்த அம்மாக்கள்ஏன் தான் இப்படி இருக்கிறார்களோ…பொண்டாட்டிபேச்சு கேட்டு, தன் மகன் தன்னை விட்டு போய் விடுவானோ என்ற பயம் தான்காரணமாக இருக்கலாம்….என்று நினைத்தபடி 'என்னம்மா ''என்று கேட்டு சலித்து கொண்டேநின்றான்….பார்வதி குறை கூற ஆரம்பித்தாள்….

இப்போ மணி என்னடா…..

மத்தியானம் மூணு மணி……

உன் பொண்டாட்டி காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவ,இன்னும் சமையல் அறை பக்கமே வரலை….எல்லா வேலையும் நான் தான் செய்யறேன்….

உடம்பு சரியில்லாமே இருக்கும்மா பாவம் …..

அதானே பார்த்தேன்…. சரி உடம்பு சரியில்லை ஒத்து க்கறேன்….. ஒரு காபி சாப்பிடலே……செஞ்சி வைச்ச டிபன் சாப்பிடலே… ஒரு வேலையும் இதுவரை செய்யலே…. சோபாவிலே..உட்கார்ந்தவ உட்கார்ந்ததுதான்…அவங்கப்பாவிடமிருந்துஒரு லெட்டர் வந்தது….. அதை படிச்சி படிச்சி அழுதவஅழுதவதான்….

ஏதாவது கெட்ட செய்தியா இருக்கும்…. நான் போய் கேக்கிறேன்…..

அதெல்லாம் நீ கேக்காதே…. இப்பகூட பார்…. அந்த லெட்டரை மார்போடு அணைச்சிக்கிட்டு கண்ணீர் வடிய அரை தூக்கம் தூங்கறா…

என்னை என்னம்மாபண்ண சொல்றே…..

அந்த லெட்டரை நானும் நைசா படிச்சிட்டேண்டா கணேஷ்….

என்னம்மா லெட்டர் அது…. நீ தான் சொல்லேன்…..

அவங்கப்பா அவ கல்யாணத்துக்கு இருபது லட்ச ரூபாயை, பேங்கில்வீட்டை அடமானம் வைச்சி வாங்கினாறு….. இதுவரை வட்டி ஒருபைசா கட்டலே……வீடு ஏலத்துக்கு வந்த நோட்டிசு அது.., நாளைக்கு ஏலம்….

அதுக்கு நாம என்ன செய்யமுடியும்…..

என்ன செய்யறதா….?…போடா லூசு பயலே….. ஆயிரம் இருந்தாலும் அவர் என் சம்ந்தி……உனக்கு மாமனார்…. மரியாதையாய் நம்ம கம்பெனி செக்கை பேங்கில் கொடுத்து,அந்த வீட்டை மீட்டு பத்திரத்தைஅவர் கையில் கொடுத்து விட்டு மறு வேலை பார்….. எவ்வளவு செலவானாலும், பரவாயில் லை….. எதற்கும்அவரையும் வீட்டுக்கு போய் அழைச்சி கிட்டுபோ…..இன்னைக்கே வேலை முடியணும்…..

அம்மா இப்படி சொன்னதும்அவளை உள்ளுக்குள் பாராட்டினான் கணேஷ்…..பின்பு வெளியே கிளம்பி போனான் அம்மா சொன்னத்தை முடிக்க…,

அழாத குறையாக துக்கத்தில் இருந்த அனுஜா,இப்படி தன் மாமியார் சொன்னதை கேட்டுகலங்கியே விட்டாள்…. அத்தை என கூறிக்கொண்டே ஓடிவந்து அவள் காலில் விழுந்தாள்……அவள் தலையை கோதி விட்ட பார்வதி, என்ன இருந்தாலும் நீ எங்க வீட்டு பொண்ணுடி….. உன் குடும்பம் வேறு இல்லை…அதுவும் என் குடும்பம் தான்…. அழாதே…வேலை பார் என்று அவளை இரண்டு கைகளால் தூக்கி அணைத்து கொண்டாள் பார்வதி…..

  • 18
  • More
Comments (0)
Login or Join to comment.