·   ·  2044 posts
  •  ·  0 friends

அண்ணாமலையார் கொடுத்த ஒரு பிடி சாம்பல்

ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு நிலம் இருந்தும் மழை இல்லாமல் பயிர் எல்லாம் கருகி விட்டது. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று திருவண்ணாமலை கிரிவல பாதையில் அழுது கொண்டே நடந்தான்.

அப்போது எதிரில் வந்த ஒரு சாமியார் அவனிடம் "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார். விவசாயி நடந்ததை சொன்னான். சாமியார் தன் கையில் இருந்த திருநீற்றை ஒரு பிடி அள்ளி அவனிடம் கொடுத்து "இதை உன் வயலில் தூவி விட்டு அண்ணாமலையாரை நினைத்து கொள்" என்று சொல்லி மறைந்து விட்டார்.

விவசாயி நம்பிக்கையோடு வயலில் தூவினான். அன்று இரவே பெரும் மழை பெய்தது. மறுநாள் பார்த்தால் கருகிய பயிர் எல்லாம் துளிர் விட்டிருந்தது. அந்த ஆண்டு அவனுக்கு வரலாறு காணாத விளைச்சல் கிடைத்தது. பின்னர் தான் தெரிந்தது அந்த சாமியார் சித்தர் வடிவில் வந்த அண்ணாமலையார் தான் என்று.

நம்பிக்கை இருந்தால் ஒரு பிடி சாம்பல் கூட வாழ்க்கையை மாற்றும் என்பதே இந்த கதையின் உண்மை.

  • 233
  • More
Comments (0)
Login or Join to comment.