- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 27.3.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். பெற்றோரின் ஒத்துழைப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த குழப்பம் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் மதிப்புகள் மேம்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கடகம்
மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வாகன பயணங்களில் போது விவேகம் வேண்டும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சிம்மம்
எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். இலக்குகளில் மாற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் புரிதல் இன்மை ஏற்படும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
வசதிகளை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான பொருள்களை வாங்குவதில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் மூலம் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
விருச்சிகம்
ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். வங்கி பணிகளில் இருந்த தாமதம் மறையும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக ரீதியான சில பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பணி நிமித்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். இனணயம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
சிந்தனையில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
கும்பம்
பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மீனம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு