- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 7.11.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். கையில் பணம் புரளும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள்.
ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர். சேமிப்புகள் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம் திருப்தி தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கடகம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். நீண்டகால நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
சிம்மம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சீர் செய்வீர். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
கன்னி: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். சொந்த ஊர் கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
துலாம்: புது ஆடை, ஆபரணங்கள் சேரும். உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அனுசரித்து போவீர். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர். பழைய நண்பர்கள், உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக்கசப்புகள் நீங்கும். பயணத்தால் உற்சாகமடைவீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மகரம்: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மன நிம்மதி கிட்டும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரப் போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
கும்பம்: மனதுக்கு இதமான செய்தி வரும். வயிற்றுவலி சீராகும். பூர்வீக வீடு, மனை தொடர்பான வழக்கில் சமரசம் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: சந்திராஷ்டமம் நடப்பதால் நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல் நலத்திலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.