இன்றைய ராசி பலன்கள் - 5.2.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பங்குதாரர்களுடன் இருந்த கருத்துமோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
மிதுனம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்ப உறுப்பினர்களிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டுவீர்கள்.
சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
கன்னி: குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்துமோதல்கள் வரலாம். சில வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. பயணங்கள் அலைச்சல் தரும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நன்மை தரும். மேலதிகாரிகள் பாராடுவர்.
தனுசு: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மன வலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்ற முயற்சிப்பீர்கள்.
மகரம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். முன் கோபம் விலகும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. திடீர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.