இன்றைய ராசி பலன்கள் - 8.11.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபர பணிகளில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சில பணிகள் தடைபட்டு முடியும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் விவாதம் இன்றி செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். திட்டமிட்ட செயலை மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தி சாதுர்யத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
சிம்மம்
இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.
கன்னி
எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கை கூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் மாற்றம் உண்டாகும். வருமான வகையில் இருந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பயணங்களில் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகரம்
எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடி வரும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கும்பம்
நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். எதிலும் உழைப்புகள் அதிகரிக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
குடும்பத்தோடு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும். மனை விருத்திக்கான சூழல் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியதை சாதிப்பீர்கள். திட்டமிட்ட கடன் உதவிகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு