·   ·  1214 posts
  •  ·  0 friends

இதுதான் வாழ்க்கை

சீடன் ஒருவன் குருவிடம் ஆலோசனை கேட்க வந்தான்.

குருவே ! எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிம்மதியே இல்லை என்றான்.

குரு - கவலை படாதே மகனே! நீ அங்கே இருக்கும் தோட்டத்தில் இருக்கும் நிறய வண்ணத்து பூச்சியில் ஒன்றை பிடித்து வா என்றார் சீடனிடம்!

சீடன் ஓடி சென்று பட்டாம் பூச்சியை பிடிக்க அங்கு இங்கும் ஓடி கடைசியில் களைத்தே போனான்.

குரு அவனை அழைத்து அமைதியாக அமர சொன்னார், சுற்றி இருக்கும் அழகிய இயற்கையை ரசிக்க சொன்னார்.

உடல் மற்றும் மன அமைதி கொண்டவனாக அமர்ந்து இருக்க, அவனை சுற்றிலும் அவன் மேலும் வண்ணத்து பூச்சிகள் அமர ஆரம்பித்தன.

குரு அப்பொழுது சீடனிடன் சொன்னார். மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சி மாதிரி. நீ துரத்தி கொண்டு ஓடினாள் அது ஓடும், அமைதியாக இருந்து இருக்கும் அழகிய வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டால் மகிழ்ச்சி உன்னை வந்து அடையும்.

  • 23
  • More
Comments (0)
Login or Join to comment.