·   ·  1915 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 23.9.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: மனவலிமையுடன் எதையும் சாதிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்: தாயாரின் உடல்நிலை சீராகும். சொன்ன சொல்லை நிறை வேற்றுவீர். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அலுவல கத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அனாவசிய பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிமேற்கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

கன்னி: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். வேற்று மதத்தினர், வேற்று மொழியினர் உதவுவர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.

துலாம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். விண்ணப்பித்த வர்களுக்கு புது வேலைக்கு அழைப்பு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நவீன மின்னணு சாதனங் கள் வாங்குவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

மகரம்: பழைய பிரச்சினைகளை நினைத்து மனதில் வருத்தம் இருக்கும். எதிலும் அவசரப்பட வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பாக்கலாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவர்.

  • 61
  • More
Comments (0)
Login or Join to comment.