·   ·  44 posts
  •  ·  0 friends

புத்திசாலித்தனம்

இரண்டு மாணவர்கள் viva voce test க்காக காத்திருக்கிறார்கள். முதல் மாணவரின் முறை வருகிறது, அவர் உள்ளே செல்கிறார்...

External : நீங்கள் ஒரு ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... திடீரென்று ரொம்ப சூடாக உள்ளது, நீங்கள் என்ன செய்வீர்கள்?

மாணவர் 1 : நான் ஜன்னலைத் திறப்பேன்.

External : அருமை... இப்போது ஜன்னலின் பரப்பளவு 1.5 சதுர மீட்டர் என்றும், பெட்டியின் அளவு 12 மீ3 என்றும் வைத்துக் கொள்வோம். ரயில் மேற்கு திசையில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. காற்றின் வேகம் தெற்கிலிருந்து 5 m/s ஆகும். அப்படியானால் பெட்டி குளிர்ச்சி அடைய எவ்வளவு நேரம் ஆகும்? மாணவனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் அவர் தோல்வியடைந்த தாக குறிக்கப் பட்டு வெளியே வருகிறார்.

வெளியே வந்த பிறகு 2வது மாணவர் viva எப்படி இருந்தது?? என கேட்க... முதலில் சென்ற மாணவரும் விஷயத்தை சொல்கிறார்.

2வது மாணவன் உள்ளே செல்ல அவனது viva தொடங்குகிறது.

External : நீங்கள் ஒரு ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... திடீரென்று அது சூடாகிறது, நீங்கள் என்ன செய்வீர்கள்?

2வது மாணவன் : நான் என் கோட்டைக் கழற்றுவேன்.

External : இன்னும் சூடாகவே இருக்கு, அப்ப என்ன செய்வீங்க?

2வது மாணவன் : நான் என் சட்டையை கழற்றுவேன்.

External (கோபமாக) : இன்னும் சூடாக இருந்தால், நீ என்ன செய்வாய்?

2வது மாணவன் : நான் என் பேண்டை கழற்றுவேன்...

External (ஆத்திரத்தில்) : நீ வெப்பத்தால் இறந்தால் என்ன செய்வது?

2வது மாணவன் : வெப்பத்தால் என் உயிரே போனாலும், நான் ஜன்னலை மட்டும் திறக்க மாட்டேன்.

  • 989
  • More
Comments (0)
Login or Join to comment.