தலைமுடி நன்றாக வளர சில டிப்ஸ்
- சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 குவளை
- (Cup) மருதாணி இலையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.
- நான்கு நாட்களுக்கு ஒரு முறை இது போல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பழுப்பு என மூவண்ணங்களில் கூந்தல் மின்னும்
- வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவி வந்தால் முடி கொட்டுதல் நிற்கும்
- தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இவற்றின் பொடிகளை ஒன்றாய்க் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்துவிட்டு, காலையில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடிகொட்டுதல் குறையும்.
- நெல்லிக்காயை நன்கு சூரிய ஒளியில் உளர்த்தி, நன்கு அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து எடுத்துக்கொண்டு, எண்ணெய்யை கொதிக்க வைக்கவும். பின்னர் எண்ணெய் ஆறியதும் வடிகட்டி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவந்தால் முடி கருமையாகும்!
- கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி அதன் பின் தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்; கருமையாகவும் இருக்கும்
- கேரட், எலுமிச்சை சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துவர தலைமுடி நன்கு வளரும்